இயல்பு நிலைக்கு திரும்பிய வாவா சுரேஷ்

வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (10:23 IST)
நாகப்பாம்பு கடித்ததால் கோமா நிலைக்கு சென்ற வாவா சுரேஷ் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி வந்துள்ளார்.  

 
கேரளாவில் திருவனந்தபுரத்தை சேர்ந்தவஎ வாவா சுரேஷ். பாம்பு பிடிப்பதில் நிபுணரான இவர் இதுவரை ராஜநாகங்கள் உள்பட பல ஆயிரம் பாம்புகளை பிடித்துள்ளார். இவருக்கு பாம்பு பண்ணையில் பணிபுரிய கேரள அரசு பணி அளித்த நிலையில் அதை நிராகரித்துவிட்டு மக்களுக்கு பாம்புகளால் பாதிப்பு ஏற்படக்கூடாது என தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
 
இந்நிலையில் சமீபத்தில் சுரேஷ் ஒரு நாகப்பாம்பை பிடித்து அதை சாக்கில் போடும்போது அது அவரது கையில் கடித்துள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். 
 
முன்னதாக இதுபோல் பலமுறை பாம்பு கடியால் அவசரநிலை சிகிச்சை பெற்று சுரேஷ் நலமுடன் திரும்பியுள்ளார். இந்த முறையும் அப்படியாக அவர் நலமுடன் திரும்ப வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். 
 
இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ், சிகிச்சை பலனளிக்கும் நிலையில் மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் அவர் பேசத் தொடங்கியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்