கேரளாவில் முழு கடையடைப்பு போராட்டம்

சனி, 14 மார்ச் 2015 (09:06 IST)
கேரள மாநில சட்டசபைக்கு முன்னர் எதிர்க்கட்சியினர் மீது காவல்துறையினர் நடத்திய தடியடியைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
 
கேரள அரசின் பட்ஜெட்டை அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று, நிதியமைச்சர் கே.எம். மாணி தாக்கல் செய்யும் போது எதிர்க்கட்சிகள், இடதுசாரி ஜனநாயக முன்னணியினர் (எல்.டி.எஃப்.) போராட்டத்தில் ஈடுபட்டதால், சட்டப்பேரவையில் கைகலப்பு ஏற்பட்டது.
 
இதையடுத்து சட்டப்பேரவை முன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது தடியடி நடத்தப்பட்டது. இதனை கண்டித்து எதிர்க்கட்சிக் கூட்டணியான இடதுசாரி கட்சியினர் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
 
இந்நிலையில், இன்று மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் தமிழக பேருந்துகள் கேரள மாநில எல்லைப்பகுதிவரை மட்டுமே இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்