மசூதியில் போஸ்ட் மார்ட்டம்; பஸ் ஸ்டாண்டில் தொழுகை: எங்கு தெரியுமா?

சனி, 17 ஆகஸ்ட் 2019 (12:48 IST)
கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடற்கூராய்வு மசூதியில் நடத்தப்பட்டது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கேரளாவில் பெய்த கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 104 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
குறிப்பாக மலப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் நிலச்சரிவு நடந்த பகுதியில் இருந்து உடல்களை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்த 40 கீமி செல்ல வேண்டி இருந்தது. இது சரிவராது என கூறி அருகில் ஏதேனும் பெரிய ஹால் இருந்தால் உடற்கூராய்வு செய்து அடக்கம் செய்யலாம் என மருத்துவர்கள் பரிந்துரைந்தனர். 
அதன்படி அருகில் இருந்த மசூதியில் உடற்சூராய்வு செய்ய இஸ்லாமிய அமைப்பு அனுமதித்தது. இதனால், மசூதி ஹாலில் உடற்கூராய்வு நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் இஸ்லாமியர்கள் தங்களது தொழுகையை பேருந்து நிலையத்தில் நடந்தினர். 
 
இந்த சம்பவம் பலருக்கும் நெகிழ்ச்சியான ஒன்றாக இருக்கிறது. இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்