கேரள மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிப்பு: எத்தனை நாட்கள் தெரியுமா?

வெள்ளி, 21 மே 2021 (19:10 IST)
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்ற நிலையில் அங்கும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு நாளை மறுநாள் உடன் முடிவடைய இருக்கும் நிலையில் தற்போது மே 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் கேரளாவில் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் மேலும் கேரள மாநில சுகாதாரத்துறை இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து கூறியதாவது:
 
இன்று புதிதாக 29,673 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 142 பேர் உயிரிழந்ததாகவும், கேரளாவில் இன்று ஒரே நாளில் 41,032 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாகவும், கேரள மருத்துவமனைகளில் தற்போது 3,06,346 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்