அவரின் நினைவைப் போற்றும் வகையிலும் அவரது சேவைக்கான நினைவு கூறலாகவும் குஜராத்தில் உள்ள நர்மதா ஆற்றின் சர்தார் சரோவர் அணையின் கரையில் உள்ள சாதுபேட் என்ற இடத்தில் மறைந்த சர்தார் வல்லபாய் படேலுக்கு. 182 மீட்டர் உயரம் கொண்ட சிலை நிறுவப்பட்டுள்ள்து. இந்த சிலையின் சிறப்பு என்னவெனில் உலகிலேயே அதிக உயரம் கொண்ட அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை, சீனாவின் புத்தர் சிலை ஆகியவற்றை விட உயரமானது. இந்த சிலையை உருவாக்க ரூ.2900 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. பல்வேறு வகையான விமர்சனகங்களுக்கிடையில் இன்று பல தலைவர்கள் முன்னிலையில் இந்திய பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது.
இதையடுத்து சிலையருகே மோடி நிற்பது போன்ற புகைப்படங்கள் டிவிட்டரில் உலாவர ஆரம்பித்தது. அதில் மோடி சிலையருகே நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டரில் பகிர்ந்த நடிகை கஸ்தூரி ‘அயன் மேனும் ஐரனி மேனும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது சர்தார் படேலை இரும்பு மனிதர் எனவும் மோடியை முரண்பட்ட மனிதர் (சொல்வது ஒன்று; செய்வது ஒன்று) எனவும் குறிப்பிட்டுள்ளார்.