வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களின் உடைமைகள் திருடப்படும் அவலம்

வெள்ளி, 12 செப்டம்பர் 2014 (17:04 IST)
காஷ்மீரில் பலத்த மழை காரணமாக வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களின் உடைமைகள் திருடப்படுவதால் பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களின் வீடுகளைவிட்டு வெளியேற தயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக உயிர்சேதமும், பொருட்சேதமும்  பெருமளவில் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, மழை காரணமாக கட்டடம் இடிந்து விழுந்த சம்பவங்களால் பலியானோர் எண்ணிக்கை 200-கும் மேல் அதிகரித்துள்ளது. 
 
வெள்ளத்தில் சிக்கி சுமார் 20,00,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில்,  முப்படையினரும் இரவும் பகலுமாக மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை சுமார் ஒரு லட்சம் மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களின் உடைமைகள் திருடப்படுவதால் பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களின் வீடுகளைவிட்டு வெளியேற தயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
ஸ்ரீநகரில் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளில் நடந்த கொள்ளைச் சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்காரணத்தால் மக்கள் மீட்பு படையினரோடு பாதுகாப்பான இடத்திற்கு செல்லக்கூட தயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்