கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்: தப்புகிறதா குமாரசாமி அரசு?

வியாழன், 18 ஜூலை 2019 (08:36 IST)
கர்நாடக சட்டசபையில் இன்று முதல்வர் குமாரசாமி தலைமையிலான ஆட்சியின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. கர்நாடக சட்டசபையில் மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 224. இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 பேர், மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் என 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் சட்டசபையின் பலம் 208 ஆக குறைந்துள்ளது.
 
இதனால் அரசின் பெரும்பான்மைக்கு 105 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. ஆனால் தற்போது காங்கிரஸ்-மஜத கூட்டணியில் 100 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இதனால் ஆட்சி கவிழும் ஆபத்து அதிகம் உள்ளது. இந்த நிலையில் ராஜினாமா செய்வதாக அறிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமலிங்கரெட்டி திடீரென தனது ராஜினாமாவை வாபஸ் பெற உள்ளதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொண்டு அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் இதனால் தற்போது முதல்வர் குமாரசாமி அரசுக்கு மேலும் ஒரு எம்எல்ஏவின் ஆதரவு அதிகரித்துள்ளது 
 
இதேபோல் இன்னும் 4 எம்எல்ஏக்கள் தங்களுடைய ராஜினாமாவை வாபஸ் பெற்று அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது ஓட்டு போட்டால் குமாரசாமியின் ஆட்சி தப்பி விடும் என்றும் கூறப்படுகிறது. இன்று காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் கடைசி நேரத்தில் திருப்பங்கள் ஏற்பட்டு குமாரசாமி ஆட்சி தப்புமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்