கர்நாடகாவில் திறந்து மூன்றே நாட்களில் அசானி புயலால் ஏற்பட்ட சூறாவளியால் சேதமடைந்த மிதவை பாலம்.
உடுப்பி மாவட்டத்தில் உள்ள மல்பே கடற்கரையில் 100 மீட்டர் நீளத்துக்கு 80 லட்ச ரூபாய் செலவில் மிதவை பாலம் அமைக்கப்பட்டது. கர்நாடகா மாநிலம் மால்பே கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மாநிலத்தின் முதல் மிதக்கும் பாலத்தை கடந்த 6 ஆம் தேதி திறக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மிதக்கும் பாலம் அங்கு அசானி புயலால் ஏற்பட்ட சூறாவளி காற்று காரணமாக திறக்கப்பட்ட மூன்று நாட்களில் சேதமடைந்துள்ளது. இந்த மிதக்கும் பாலத்தின் செயல்பாடு காலநிலை மாற்றம் காரணமாக சேதமடைந்தததை அடுத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.