அது பாம்பு இல்ல.. அது என் புருஷன்.! – பாம்போடு குடும்பம் நடத்திய மூதாட்டி!

செவ்வாய், 7 ஜூன் 2022 (15:02 IST)
கர்நாடகாவில் வீட்டிற்கு வந்த பாம்பை இறந்த கணவரின் மறுபிறவி என கூறி அதனோடு அந்த வீட்டிலேயே மூதாட்டி ஒருவர் வாழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை பகுதியை சேர்ந்த மூதாட்டி மானஷா. இவரது கணவர் சரவவ்வா கம்பாரா கடந்த சில ஆண்டுகள் முன்னதாக இறந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மானஷா வீட்டிற்கு நாகப்பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இறந்துபோன தனது கணவர்தான் பாம்பு வடிவில் வந்துள்ளதாக நம்பிய அந்த மூதாட்டி அதற்கு பால் வைத்ததுடன் நான்கு நாட்களாக அந்த வீட்டிற்குள் அதனுடனே வசித்து வந்துள்ளார்.

இதையறிந்த அந்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் பாம்பை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அந்த மூதாட்டி அது தனது கணவர் என்றும், அதை பிடிக்க கூடாது என்றும் தடுத்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் வனத்துறைக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் ஆச்சர்யத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்