ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, தமிகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கூறியது. இது தொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக, நேற்று கர்நாடக சட்ட சபையில் நேற்று அவசர கூட்டம் கூட்டப்பட்டது. இறுதியில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், சட்டசபையில் உறுப்பினர் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்த போது, எதையும் கண்டு கொள்ளமால், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் உமாஸ்ரீ, தனது குறிப்பேட்டில் கோலம் ஒன்றை வரைந்து கொண்டிருந்தார். அந்த விவகாரம் அங்கு சர்ச்சையை கிளப்பியுள்ளது.