முதல்வர் அணியும் செருப்பின் விலை ரூ.70 ஆயிரம்: என்ன ஒரு எளிமை!

செவ்வாய், 14 நவம்பர் 2017 (11:41 IST)
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது கால்களுக்கு அணிந்துள்ள செருப்பின் விலை ரூபாய் 70 ஆயிரம் என கூறப்படுகிறது. இது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு முதல்வர் 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் செருப்பு அணியலாமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.


 
 
கர்நாடக மாநிலத்தின் முதல்வராக உள்ளார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையா. இவர் மிகவும் எளிமையான முதல்வர் என கூறப்படுகிறார். ஆனால் அவர் தற்போது அணிந்துள்ள செருப்பின் விலையை கேட்கும் போது அவரது எளிமை கேள்விக்குறியாகிறது.
 
மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் கர்நாடக மாநில தலைவரான எச்.டி.குமாராசாமி, சித்தராமையா மீது தற்போது வீசியுள்ள குற்றச்சாட்டில் அவர் ரூபாய் 70 ஆயிரம் மதிப்புள்ள செருப்புகளை அணிந்துள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 
இதே குமாரசாமி கடந்த ஆண்டு சித்தராமையா மீது, அவர் ரூபாய் 70 லட்சம் மதிப்புள்ள வைரக்கல் பதித்த ஹப்லட் என்ற வகையைச் சேர்ந்த கைக்கடிகாரத்தை அணிந்திருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்