அப்துல் கலாம் இறுதியாக மாணவர்களிடம் கேட்க விரும்பியது என்ன?

புதன், 29 ஜூலை 2015 (13:14 IST)
அப்துல் கலாம் தனது மரணத்திற்கு முன்பு மாணவர்களிடம் கேட்க விரும்பியது என்ன என்பது குறித்து அவரது உதவியாளர் ஸ்ரீஜன் பால்சிங் கூறியுள்ளார்.
 

 
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு மேகாலயாவின் ஷில்லாங்கில் ஐஐஎம் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
 
அந்த நிகழ்ச்சியில் அப்துல் கலாம் சில மாணவர்களிடம் கேட்க நினைத்த கேள்வி குறித்து அவரது உதவியாளரும், ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவருமான ஸ்ரீஜன் பால் சிங் செய்தியாளரிடம் செவ்வாய்க்கிழமை கூறியபோது, ”டெல்லியிலிருந்து ஷில்லாங்கிற்கு விமானத்தில் பயணித்தபோது, தற்போதைய நாடாளுமன்ற நிகழ்வுகள் குறித்து கலாம் வருத்தம் தெரிவித்தார்.
 
நாடாளுமன்றம் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் சிறப்பாக நடைபெறுவதற்கான வழிமுறைகளைக் கண்டறியும்படி மாணவர்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தார். மேலும், நாடாளுமன்றம் ஆக்கப்பூர்வமாக நடைபெறுவதற்கான 3 ஆலோசனைகளை மாணவர்கள் வழங்க வேண்டும் என்று கலாம் எதிர்பார்த்திருந்தார்” என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்