நீதிபதி கர்ணன் சரண் அடைகிறாரா? உறவினர் நெருக்கடியால் முடிவு
திங்கள், 15 மே 2017 (06:19 IST)
சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனை வலைவீசி தேடி வரும் மேற்கு வங்க போலீசார், கர்ணனை எந்த நேரத்திலும் கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கர்ணனின் நிபந்தனையற்ற மன்னிப்பை சுப்ரீம் கோர்ட் ஏற்காததால், வேறு வழியின்றி கர்ணன் தற்போது சரண் அடையும் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நீதிபதி கர்ணனுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை போலீசார் நெருக்கி வருவதால் நீதிபதி கர்ணன் வேறு வழியின்றி சரண் அடைய முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
நீதிபதி கர்ணன் இன்று அல்லது நாளை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, அம்பேத்கர் சிலை முன்பு, சரணடைய இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், மேற்கு வங்க மற்றும் சென்னை போலீசார் பரபரப்பில் உள்ளனர்.