ஸ்கெட்ச் அவரு? வாய்ஸ் இவரா? மோடியின் சூப்பர் ப்ளான்!!

வெள்ளி, 31 மே 2019 (11:52 IST)
பாஜக தேசிய தலைவராக இருந்த அமித் ஷா மத்திய அமைச்சராகியுள்ளதால் பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் குஜராத்தின் காந்திநகர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் அமித் ஷா. இந்த வெற்றியின் மூலம் அவர் மத்திய அமைச்சராகவும் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். 
 
பாஜகவின் உட்கட்சி விதிப்படி அமைச்சரவையில் பொறுப்பு வகிக்கும்  நபர் அக்கட்சியின் தலைவராக இருக்க முடியாது. இதனால், அமித் ஷா அமைச்சராகியுள்ளதால் பாஜக தேசிய தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 
அதன்படி பாஜக தேதிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நட்டா பாஜக தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டாலும் அமித் ஷா அரசியல் மற்றும் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் முக்கிய பங்காற்றுவார் என கூறப்படுகிறது. 
 
ஜே.பி.நட்டா ஏற்கனவே மோடி அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்