மாணவர் சங்க தேர்தலில் பாஜக வேட்பாளர் படுதோல்வி! 13 ஆண்டுகளுக்கு பின் எஸ்.எஃப்.ஐ வெற்றி

புதன், 18 செப்டம்பர் 2019 (08:37 IST)
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் (ஜே.என்.யு.எஸ்.யூ) தேர்தலில் பாஜகவின் மாணவர் பிரிவான 'ஏபிவிபி' அமைப்பின் மனிஷ் ஜாங்கிட் தோல்வியடைந்தார். எஸ்.எஃப்.ஐ 13 ஆண்டுகளுக்குப் பிறகு தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது. இந்த அமைப்பின் ஆயிஷ் கோஷ் 2,313 வாக்குகளும் பாஜகவின் மனிஷ் ஜாங்கிட் 1,128 வாக்குகளும் பெற்றனர்.
 
 
பொதுச் செயலாளர் பதவிக்கு, ஏ.ஐ.எஸ்.ஏ அமைப்பின் சதீஷ் சந்திர யாதவ் வெற்றி பெற்றார். டிஎஸ்எஃப்-இன் சாகேத் மூன் துணைத் தலைவர் பதவியையும், இணைச் செயலாளர் பதவியை, ஏ.ஐ.எஸ்.எஃப் அமைப்பின் முகமது டேனிஷ் கைப்பற்றினர்
 
 
இந்த தேர்தலில் இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்.எஃப்.ஐ), ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு (டி.எஸ்.எஃப்), அகில இந்திய மாணவர் சங்கம் (ஏ.ஐ.எஸ்.ஏ) மற்றும் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (ஏ.ஐ.எஸ்.எஃப்) ஆகியவற்றை உள்ளடக்கிய ஐக்கிய இடதுசாரி குழு, மற்றும் காங்கிரஸின் தேசிய மாணவர் சங்கம், சத்ரா ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய அமைப்புகள் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்