பி.எச்.டி படிக்கும் மாணவியை பலாத்காரம் செய்த எம்.பில். மாணவன்

திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (11:37 IST)
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி படிக்கும் மாணவியை, எம்.பில். படிக்கும் மாணவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி படிக்கும் மாணவியை, அதே பலகலைக்கழக மாணவன் பாலியல் பலாத்காரம் செய்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இச்சம்பவம் குறித்து அந்த மாணவி கூறியதாவது:-
 
நான் பல்கலைக்கழகத்தில் என்னுடன் படிக்கும் சில மாணவர்களிடம் சமூக வலைதளங்களில் கிடைக்கும் சினிமா படங்களை கேட்டு இருந்தேன். அதற்கு பல்கலைக்கழக மாணவர் பேரவையின் மூத்த உறுப்பினரான எம்.பில். மாணவர், நான் படங்களை டவுன்லோடு செய்து பென்டிரைவில் தருகிறேன் என்று கூறினார்.
 
சனிக்கிழமை அன்று அந்த மாணவர் என்னை அறைக்கு வந்து படங்களை பென்டிரைவில் வாங்கிக்கொள்ளும்படி மொபைலில் குறுஞ்செய்தி அனுப்பினார். அதன்படி நானும் பென்டிரைவரை எடுத்துக்கொண்டு அவரது அறைக்குச் சென்றேன். உள்ளே சென்றதும் என்க்கு ஜூஸ் கொடுத்தார்.
 
அதுதான் எனக்கு தெரியும். பின்னர் நான் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது அருகே படுத்திருந்தார். எனக்கும் உடலில் ஒரு மாற்றம் தெரிந்தது. சிறிது நேரம் கழித்துதான் உணர்ந்தேன் அவர் என்னை மயக்கமடையச்செய்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் என்று. 
 
இதையடுத்து நான் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். அதன் அடிப்படையில் காவல் துறையினர் அந்த மாணவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
 
இவ்வாறு பலாத்கார சம்பவம் குறித்து அந்த மாணவி தெரிவித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்