11 வயது சிறுமியை திருமணம் செய்த பாஜக தலைவரின் மகன்

வெள்ளி, 1 ஜூலை 2016 (11:48 IST)
பா.ஜா.க தலைவரின் மகன் 11 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


ஜார்க்கண்ட் பா.ஜா.க தலைவர் தாலா மராண்டியின் மகன் முண்டா மராண்டி கடந்த செவ்வாய்க்கிழமை 11 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர், இரண்டு வருடங்களாக ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக பயன்படுத்தி வந்ததாகவும், அவரை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டு இந்த 11 சிறுமியை திருமணம் செய்து கொண்டதாகவும் ஏமாற்றபட்ட பெண், ஜார்க்காண்ட் பெண்கள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.


இது தொடர்பாக ஏதிர்க்கட்சியினர் விசாராணை நடத்த வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்