டிவி கூட இல்லாத இந்திய அணி கேப்டனின் குடும்பத்தினர்: அரசே அளித்த டிவி

செவ்வாய், 11 அக்டோபர் 2022 (19:02 IST)
டிவி கூட இல்லாத இந்திய அணி கேப்டனின் குடும்பத்தினர்: அரசே அளித்த டிவி
இந்திய ஜூனியர் கால்பந்து அணியின் கேப்டன் வீட்டில் டிவி கூட இல்லாத நிலையில் ஜார்க்கண்ட் அரசு அந்த குடும்பத்தில் டிவி வழங்கியுள்ளது.
 
உலக கோப்பை ஜூனியர் கால்பந்து போட்டி இன்று முதல் தொடங்குகிறது. இதில் இந்தியா உள்பட 16 அணிகள் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்திய அணி அஸ்டம் ஓரான் என்பவர் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரது வீட்டில் டிவி கூட இல்லை என்பதும் தெரிய வந்தது
 
இதை அடுத்து தங்களது மகள் விளையாடுவதை டிவியில் பார்க்க விரும்புவதாக அவரது பெற்றோர்கள் கூறிய நிலையில் ஜார்க்கண்ட் அரசு உடனடியாக ஓர் டிவியை அவர்களுக்கு வாங்கி கொடுத்துள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்