தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று இறுதிவாதம் நடைபெறுகிறது.
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்கில் இவர்களை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்காக, கர்நாடக அரசு மூத்த வழக்குரைஞர் பி.வி. ஆச்சார்யா இறுதி வாதத்தை முன் வைக்க உள்ளார். இதனையடுத்து, முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பு வாதம், விடுமுறை கால நீதிபதிகள் பினாகி சந்திரபோஸ் மற்றும் அமித்தவா ராய் ஆகியோர் முன்பு நடைபெறுகிறது.