ஜெயலலிதாவின் கடிதங்கள் குப்பைக்கு செல்கின்றன: சுப்பிரமணியன் சுவாமியின் ஆணவப்பேச்சு!

வெள்ளி, 27 மே 2016 (11:43 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக நலன் கருதி அடிக்கடி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுகிறார். தமிழக முதல்வரின் இந்த கடிதங்கள் குப்பைக் கூடைக்குத்தான் செல்கின்றன என பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கருத்து கூறியுள்ளார்.


 
 
சுப்பிரமணியன் சுவாமி என்றாலே சர்ச்சைக் கருத்துக்கள் கூறி பரபரப்பாக இருக்கும். அடிக்கடி சர்ச்சைக் கருத்துக்களை கூறி தன்னை சுற்றி பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி கொள்வார். அதிலும் குறிப்பாக இலங்கை தமிழர் விவகாரம், தமிழக மீனவர்கள் பிரச்சனை, ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை விவகாரம் என தமிழகத்தின் முக்கியமான பல பிரச்சணைகளில் சர்ச்சை கருத்துக்களை கூறி தமிழ் மக்களின் வெறுப்பை சம்பாதிப்பவர்.
 
தற்போது மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற பின்னர் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு அவர் பேசி வருகிறார். மாநிலங்களவை சபாநாயகரால் அவரது பேச்சுக்கு கண்டனத்துக்கு ஆளானார்.
 
இவர் தற்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கடிதங்கள் குப்பைக்கு தான் செல்கின்றன என ஆணவமாக பேசியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவதில் ஜெயலலிதா கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஆனால் அவர் எழுதும் கடிதங்கள் அதிகமாக குப்பைக் கூடைக்குத்தான் செல்கின்றன.
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யும் விவகாரம், மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரம் போன்றவை தொடர்பாகவும் பிரதமருக்கு ஜெயலலிதா எழுதும் கடிதம் குப்பைக் கூடைக்குத்தான் செல்லும் என்று சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்