ஜம்மு-காஷ்மீரில் மாணவர்களே இல்லாத 124 பள்ளிகள்: கல்வியமைச்சர் தகவல்

செவ்வாய், 24 மார்ச் 2015 (13:34 IST)
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 124 பள்ளிகளில் ஒரு மாணவர்கள் கூட இல்லை என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நயீம் அக்தர் தெரிவித்துள்ளார். 
 
ஜம்மு-காஷ்மீரில் மாநில சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நயீம் அக்தர் பதிலளித்துப் பேசுகையில், "ஜம்மு மாகாணத்தில் உள்ள 50 பள்ளிகளிலும், காஷ்மீரில் உள்ள 74 பள்ளிகளிலும் ஒரு மாணவர்கள் கூட இல்லை எனறு தெரிவித்தார்.
 
அதைத் தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், 'நகரங்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனுடன் ஒப்பிடும்போது கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் தரம் குறைவாக இருப்பதாகக் கூறினார்.
 
இதற்குப் பதிலளித்த நயீம் அக்தர், "மாநிலத்தில் 27 தொடக்கப்பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 468  நடுநிலைப்பள்ளிகளும், 332 உயர்நிலை பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 95 அரசு கல்லூரிகள் மாநிலத்தில் செயல்படுகின்றன.
 
அவற்றில் 25 கல்லூரிகள் கடந்த 5 ஆண்டுகளில் அனுமதியளிக்கப்பட்டன. இந்தக் கல்லூரிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், ஆய்வு கூடங்கள் மற்றும் நூலக வசதிகள் மேம்படுத்தப்படும்" என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்