கனடா பிரதமரின் இந்த அறிவிப்புக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்தது. இந்திய விவசாயிகள் குறித்து கனடா தலைவர்கள் தவறான தகவலை தெரிவித்துள்ளனர் என்றும் ஜனநாயக நாட்டில் உள் விவகாரத்தில் வேறொரு நாட்டின் கருத்து தெரிவிப்பது தேவையற்ற இது என்றும் இதனால் இருநாட்டுன் நல்லுறவு பாதிக்கப்படும் என்றும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மனித உரிமைகளுக்கான அமைதியான முறையில் எங்கு போராட்டம் நடந்தாலும் கனடா அதை ஆதரிக்கும். பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை வரவேற்கிறேன். ஆனால் என் ஆதரவில் பின்வாங்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடாவில் அடுத்த வாரம் நடக்கும் கொரோனா குறித்த வெளியுறவு மாநாட்டை இந்தியா புறக்கணிக்கிறது. ஆம், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என கனடாவிற்கு தகவல் அனுப்பட்டுவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது.