இமெயிலை ஓப்பன் செய்ய தெரியாததால் 3 ஆண்டுகள் சிறையில் இருந்த நபர்.. இப்படியும் நடக்குமா?

வியாழன், 28 செப்டம்பர் 2023 (09:57 IST)
குஜராத்தை சேர்ந்த சிறை அதிகாரிகளுக்கு இமெயிலை ஓபன் செய்யத் தெரியாததால் கைதி ஒருவர் மூன்று ஆண்டு காலம் கூடுதலாக சிறைவாசத்தை அனுபவித்த தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
குஜராத் சிறையில் இருந்த சந்தன் என்ற 27 வயது இளைஞர் இளைஞரை ஜாமினில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு அந்த உத்தரவை இமெயிலில் அனுப்பியது. ஆனால் ஜாமீன் உத்தரவின் இணைப்பை திறக்க முடியவில்லை என சிறை அதிகாரிகள் கூறியதால், சந்தன் மூன்று ஆண்டுகள் கூடுதலாக குஜராத் சிறையில் இருந்ததாக கூறப்படுகிறது. 
 
இது குறித்து தகவல் வெளியானதும் குஜராத் நீதிமன்றம் உடனடியாக அந்த நபரை விடுதலை செய்ய உத்தரவிட்டதோடு அவருக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் தீர்ப்பளித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்