ஐடியில் பணிபுரியும் இளம்பெண் கொலை: ஜிம் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை

வியாழன், 7 நவம்பர் 2019 (07:38 IST)
பெங்களூரில் ஐடி துறையில் பணிபுரிந்த இளம்பெண் ஒருவர் கடந்த 2010ஆம் ஆண்டு தனது வீட்டில் தனியாக இருந்தபோது ஜிம்மில் உரிமையாளர் ஒருவரால் கொல்லப்பட்டார். இந்த வழக்கு தீர்ப்பு நேற்று வெளியான போது ஜிம் உரிமையாளர் ஜேம்ஸ் என்பவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது
 
பெங்களூரில் உள்ள ஜேபி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு பகுதியில் 26 வயது சுரேகா என்ற ஐடி பணியாளர் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டிற்கு வந்த ஜிம் உரிமையாளர் ஜேம்ஸ் என்பவர் சுரேகாவை துடிக்க துடிக்க கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார் 
 
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஜேம்ஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ நடத்த வேண்டும் என்று சுரேகாவின் பெற்றோர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது
 
கடந்த 9 ஆண்டுகளாக சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் தற்போது ஜேம்ஸ் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சுரேகாவின் கணவர் மீது இருந்த பகையால் சுரேகாவை ஜேம்ஸ் கொலை செய்த்தாக தெரிகிறது
 
இந்த கொலை சம்பவத்தில் சுரேகாவின் கணவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சுரேகாவின் பெற்றோர்கள் சந்தேகம் அடைந்து இதுகுறித்து மனு அளித்திருந்தனர் என்பதும், ஆனால் சம்பவம் நடந்த அன்று அவரது கணவர் வெளியூரில் இருந்ததால் இந்த குற்றச்சாட்டை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்