நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய கடந்த மாதம் இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தரையிறங்க இருந்த நிலையில், திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனை அடுத்து விக்ரம் லேண்டரை மீண்டும் தொடர்பு கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளும் நாசா விஞ்ஞானிகளும் அடுத்தடுத்து செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை
இந்த நிலையில் கடந்த மாதம் 21ஆம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் இரவு தொடங்கி ஆரம்பித்துவிட்டதால், விக்ரம் லேண்டரை இனிமேல் தொடர்பு கொள்ள முடியாது என்று விஞ்ஞானிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர். தமிழக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களும் இதனை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது