மதிச்சு கூப்பிட்டதுக்கு நல்ல வேலை பாத்துட்டீங்க? – இயக்குனரை கிழித்த இஸ்ரேல் தூதர்!

செவ்வாய், 29 நவம்பர் 2022 (09:32 IST)
காஷ்மீர் ஃபைல்ஸ் படம் குறித்து இஸ்ரேலிய இயக்குனர் பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் அவருக்கு இஸ்ரேலிய தூதர் பதிலடி அளிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.

கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில் பேசிய இஸ்ரேலிய இயக்குனரும், ஜூரி குழுவின் தலைவருமான நடாவ் லபிட், இந்தியாவின் தேசிய விருது பெற்ற படமான காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை கடுமையாக விமர்சித்ததுடன், இந்த விழாவிற்கு தகுதியற்ற படம் என்றும் கூறினார்.

அவர் அவ்வாறு கூறியபோது காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட பலரும் இருந்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடாவ் லபிட்டை கண்டித்து இந்தியாவின் இஸ்ரேலிய தூதர் நவோர் கிலோன் ட்விட்டரில் நீண்ட பதிவை இட்டுள்ளார்.

ALSO READ: காஷ்மீர் ஃபைல்ஸ் வெறுப்புணர்வை தூண்டும் படம்? – இஸ்ரேல் இயக்குனர் விமர்சனம்!

அதில் அவர் “இஸ்ரேலை மதித்து உங்களை அவர்கள் ஜூரி குழுவில் இடம்பெற செய்தார்கள். அதுமட்டுமல்லாமல் இஸ்ரேல் உடனான நட்புறவை காட்டும் விதமாக இஸ்ரேலிய தொடரான ’ஃபௌடா’ வையும் அவர்கள் கௌரவப்படுத்தினார்கள். உங்களை அழைத்து உங்களுக்கான பணிவிடைகளை செய்து சிறப்பாக நடத்திய இந்திய சகோதர, சகோதரிகளை புண்படுத்தும் விதமாகவும், இழிவுப்படுத்தும் விதமாகவும் நடந்து கொண்டுள்ளீர்கள்.



எனக்கு சினிமா பற்றி நிறைய தெரியாது. ஆனால் ஒரு படத்தை விமர்சிக்கும் முன்னால் அது குறித்த வரலாற்று உண்மைகள் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் பேச்சால் இந்திய நட்புகள் ஸிண்டர்ஸ் லிஸ்ட் படத்தை சந்தேகிப்பது, படுகொலைக்கு உள்ளாகி தப்பித்தவரின் மகனான எனக்கு வருத்தத்தை அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

மேலும் “இந்தியா மற்றும் இஸ்ரேல் நாட்டு மக்களுக்கும், அரசுகளுக்கும் இடையிலான நட்பு மிகவும் வலுவானது மற்றும் நீங்கள் ஏற்படுத்திய சேதத்திலிருந்து தப்பிக்கும்.

ஒரு மனிதனாக நான் வெட்கப்படுகிறேன், எங்கள் புரவலர்களின் தாராள மனப்பான்மை மற்றும் நட்பை நாங்கள் திருப்பிச் செலுத்திய மோசமான நடத்தைக்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்