மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தமிழ்நாட்டில் உள்ளதைப் போலவே அங்கும் சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான பார்கவா, முட்டை சாப்பிடாத குழந்தைகளை கட்டாயப்படுத்துவதாக உள்ளது, அவர்களுக்கு இறைச்சியையும் சேர்த்துக் கொடுங்கள் என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், அதில், பாஜக ஆளும் சில மாநிலங்களிலும் இதேபோல் மாணவர்களுக்கு சத்துணவில் முட்டை அளிக்கப்படுகிறது. அதனால் மாமிசம் சாப்பிடுவர்கள் எல்லாம் நரமாமிசம் சாப்பிடுபவர்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்.