படுத்து தூங்கற இடமா இது...? நல்ல வேளை ஒண்ணும் ஆகலை...

திங்கள், 19 நவம்பர் 2018 (14:04 IST)
ஆந்திர மாநிலத்தில் ஒருவர் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது அதிவேகமாக விரைந்து வந்த ரயிலிடம் இருந்து தப்பிக்க அவர் தண்டவாளத்திலே படுத்துக்கொண்டதால் உயிர் பிழைத்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஆந்திர மாநிலத்திலுள்ள அனந்புர் ரயில் நிலையத்தில் ரயிலில் பயணித்த பயணி அவரது ஸ்டேஷன் வந்ததும் கீழே இறங்கினார்.
 
ஆனால் அவர்   எதிர்ப்புறம்  ரயில்வருவதைப் பார்க்காமலிருந்தார். இருப்பினும் தண்டவாளத்தை கடந்து போக முற்பட்டார்.

ஆனால் ரயில் மின்னல் வேகத்தில் வரவே செய்வது தெரியால் முதலில் தடுமாறினாலும் பிறகு சமயோஜிதனாக தண்டவாளத்திலேயே படுத்துகொண்டார். ரயில் அவரைக் கடந்து போன பிறகு தான் அவர் எழுந்து தன் சட்டைமேல் படிந்த தூசுகளைத் தட்டிவிட்டு எழுந்து சென்று விட்டார்.
 
நல்லவேளை ஆபத்தில் இருந்து உயிர் பிழைத்தாரே! என பயணிகள் நிம்மதியடைந்தனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்