பொதுமக்கள் தங்களது விரலை காட்டி செல்பி எடுக்கிறார்கள். இப்படி எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள். இதனால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து ரூபா ஐபிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், விரலை காட்டி செல்பி எடுப்பதன் மூலம் நமது தொழில்நுட்ப தகவலை ஹேக்கர்ஸ் திருடலாம் என கூறியுள்ளார்.
மேலும், நமது செல்பியில் உள்ள கை விரல்களை ஜூம் செய்து அதை ஸ்கேன் செய்து அதை வைத்து நமது கை ரேகையை உருவாக்கலாம் .இப்படி கை ரேகையை உருவாக்கி பெரிதளவில் குற்றம் நடக்கும் இடங்களில் அதை பயன்படுத்தலாம் மற்றும் பெரிதளவில் மோசடி செய்யவும் அதை பயன்படுத்தலாம்.