ஹெல்மெட் இல்லாம வண்டி ஓட்டதானே கூடாது? தள்ளிட்டு போகலாம்ல?? – வைரல் வீடியோ

புதன், 4 செப்டம்பர் 2019 (19:00 IST)
இந்திய அரசு போக்குவரத்து விதிமீறல்களை கடுமையாக தண்டிக்கும் விதத்தில் புதிய சட்ட திருத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதை சமாளித்து நைஸாக பலர் எஸ்கேப் ஆகி விடுகிறார்கள்.

புதிய மோட்டார் வாகன சட்டப்படி ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டினால் 1000 ரூபாய் அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரி பங்கஜ் நயின் என்பவர் தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஹெல்மெட் அணியாத பலர் தண்டத்தொகை கட்ட வேண்டிய நிர்பந்தத்தை தவிர்க்க வண்டியை ஓட்டி செல்லாமல், தள்ளிக்கொண்டு செல்கிறார்கள். அந்த வீடியோவில் ”ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டினால் குற்றம். ஆனால் நடந்து செல்வது அல்ல” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் பதிவிட்டுள்ள பங்கஜ் நயின் “தண்டத்தொகையை தவிர்ப்பதற்கான நல்ல நடைமுறைதான். தயவு செய்து சாலை விதிகளை மதித்து இதுபோன்ற இக்கட்டான சூழலை தவிருங்கள்” என்று அறிவுரை கூறியிருக்கிறார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியுள்ளது. இது நல்ல ஐடியாவாக தெரிந்தாலும் எல்லா இடத்திலும் இதை பயன்படுத்தி தப்பித்து கொள்ளலாம் என யரௌம் நினைக்க வேண்டாம் என பலர் அறிவுறுத்தியுள்ளனர்.

This is hilarious.
Innovative ways to avoid traffic challans
☺️☺️

Pls follow traffic rules to avoid such situations #MotorVehiclesAct2019 pic.twitter.com/hh7c1jWC80

— Pankaj Nain IPS (@ipspankajnain) September 3, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்