ஐபிஎஸ் அதிகாரி ஷபீர் கரீம் சிவில் சர்வீஸ் தேர்வில் புளூடூத் கருவியை மறைத்து வைத்து காப்பியடித்து சிக்கிக்கொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது மனைவி ஜாய்ஸ் ஜோய் மற்றும் அவரது ஆசிரியர் ராம் பாபுவும் உதவியது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களையும் போலீஸார் தெலுங்கானாவில் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து, செல்போன், புளூடூத், கேள்வித்தாள், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
புளூடூத், செல்போனை பயன்படுத்தி காப்பி அடிக்க பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்ட பனியன், சட்டையை ஷபீர் கரீம் அணிந்ததும், அதை அவரின் மனைவி வடிவமைப்பு செய்து கொடுத்ததும் தெரியவந்துள்ளது.