இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவின் தென்துருவத்திற்கு அனுப்பிய சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய நிலையில் அந்த இடத்திற்கு சிவசக்தி என பிரதமர் மோடி பெயரிட்டார். இந்த நிலையில் இந்த பெயருக்கு சர்வதேச வானியல் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது
நிலவின் தென்துருவத்திற்கு முதல் முதலாக இந்தியா அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது
இதனை அடுத்து விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியை சிவசக்தி என்று பெயர் வைத்து அழைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த பெயருக்கு சர்வதேச வானியல் சங்கம் மார்ச் 19ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்திய புராணங்களில் இடம்பெற்ற சிவசக்தி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது ஏ
ஏற்கனவே கடந்த 2008 ஆம் ஆண்டு சந்திராயன் 1 விண்கலம் தரையிறங்கிய இடத்திற்கு ஜவஹர் பாயிண்ட் என்று பெயர் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.