புதுச்சேரியில் போலி ஆவணம் தயாரித்து காந்தி வீதியில் உள்ள முந்திரி பருப்பு கடையை அபகரிப்பு செய்யும் ஊழியர் கோகுல் என்பவரை கைது செய்ய வேண்டும், குற்றவாளிக்கு துணை போகும் பெரிய கடை ஆய்வாளர் ஜெய்சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரிய கடை காவல் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக சமூக ஜனநாயக இயக்கங்கள் அறிவித்திருந்தன.
அதன்படி இன்று, மிஷின் வீதி- நேரு வீதி சந்திப்பில் இருந்து பேரணியாக வந்த போராட்டக்காரர்களை போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்தனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.