கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இறக்கத்தில் இருந்த பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக நல்ல ஏற்றத்தில் உள்ளது. இதுவரை இல்லாத வகையில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் புதிய உச்சம் தொட்டு ஏற்றத்தில் உள்ளன. பங்குச்சந்தை கடந்த மார்ச், ஏப்ரலில் இறங்கியபோது முதலீடு செய்தவர்களுக்கு தற்போது மிகப்பெரிய லாபம் கிடைத்துள்ளது
இன்று பங்குச்சந்தை தொடங்கியவுடன் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 46,277 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டு சாதனை செய்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 318 புள்ளிகள் அதிகரித்து 46,277 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதேபோல் நிப்டி 78 புள்ளிகள் உயர்ந்து 13556 என வர்த்தம் ஆகி வருகிறது
அமெரிக்க தேர்தலில் ஜோபைடன் பெற்ற வெற்றி, கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவது, புதிய முதலீடுகள் அதிகரித்து வருவது ஆகியவையே பங்குச்சந்தையின் ஏற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது