மோடியின் அறிவிப்பால் பாகிஸ்தனுக்கு ரூ.500 கோடி இழப்பு

புதன், 9 நவம்பர் 2016 (19:41 IST)
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடியின் அறிவிப்பால் பாகிஸ்தானுக்கு ரூ.500 கோடி இழப்பீடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இன்று முதல் செல்லாது என்று அமைச்சரவை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
 
இதன்மூலம் பாகிஸ்தானுக்கு ரூ.500 கோடி இழப்பீடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி அறிவிப்பு மூலம் கள்ள நோட்டுகளை ஒழித்து விடலாம். ஆனால் இதன் மூலம் கருப்பு பணத்தை ஒழிக்க முடியும் என்பது தான் வேடிக்கையானது.
 
பாகிஸ்தானின் இரகசிய அமைப்பான ஐ.எஸ்.ஐ. அமைப்பினர் இந்தியாவில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதால் இந்தியாவின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.
 
இந்திய ரிசர்வ் வங்கி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தாயாரிக்க ரூ.29 வரை செலவிடுகிறது. ஆனால் பாகிஸ்தான் இரகசிய அமைப்பினர் ரூ.49 வரை செலவிட்டு அதை இந்தியாவில் 350-400 என விற்பனை செய்கின்றனர்.
 
கடந்த 2010ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த போலி ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.1,600 கோடி ஆகும். இதன்மூலம் பாகிஸ்தான் இரகசிய அமைப்பிற்கு ரூ.500 கோடி லாபம் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது பழைய நோட்டுகள் புழக்கத்தில் இல்லாததால் பாகிஸ்தான் இரகசிய அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு ரூ.500 கோடி இழப்பீடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்