இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவர் யார்? – தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

வியாழன், 9 ஜூன் 2022 (12:21 IST)
இந்திய குடியரசு தலைவருக்கான பதவிக்காலம் முடிவடையும் நிலையில் புதிய குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தியாவின் குடியரசு தலைவராக தற்போது ராம்நாத் கோவிந்த் பதவி வகித்து வருகிறார். குடியரசு தலைவருக்கான பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும். ராம்நாத் கோவிந்தின் குடியரசு தலைவர் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதனால் அடுத்த குடியரசு தலைவர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் தேதி இன்று 3 மணிக்கு வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்