இது ஆரம்பம்தான்.. இனிமேல்தான் சம்பவமே இருக்கு! – குறிவைக்கப்படும் சீன வலைதளங்கள்!

புதன், 1 ஜூலை 2020 (14:40 IST)
சீனாவுடனான மோதலை தொடர்ந்து 59 செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ள நிலையில் மேலும் சில வலைதளங்களையும் தடை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய – சீன எல்லைப்பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு படைகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதனால் இரு நாடுகளுக்கிடையே உறவு நிலையில் விரிசல் எழுந்துள்ள நிலையில் சீன செயலிகளை தடை செய்வதாக இந்திய அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 மொபைல் செயலிகளை தடை செய்துள்ளதற்கு சீனா வருத்தம் தெரிவித்துள்ளது. இதனால் சீன நிறுவனங்கள் பல பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் சீன அரசிற்கு தகவல்கள் எதுவும் பகிரவில்லை என தடை செய்யப்பட்ட செயலிகல் ஆதாரத்துடன் விளக்கவும் மத்திய அரசு வாய்ப்பு அளித்துள்ளது.

இந்நிலையில் 59 செயலிகள் தடை செய்யப்பட்டது முதற்கட்ட நடவடிக்கைகள் மட்டுமே என்று கூறப்படுகிறது. சீனாவிலிருந்து செயல்படும் மேலும் சில சீன செயலிகளையும், ஆபாச வலைதளங்கள், வர்த்தக வலைதளங்கள் உள்ளிட்டவற்றையும் தடை செய்ய பட்டியல் தயாரிப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்