இந்தியாவின் பிரபல பெண் பைக் வீராங்கனை வேணு பலிவால் சாலை விபத்தில் மரணம்

செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (12:39 IST)
வேணு பலிவால் ஜெய்பூரைச் சேர்ந்தவர். அவர் தன்னிடம் உள்ள ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.


 

 
கல்லூரிப் பருவம் முதலே மோட்டார் சைக்கிள் ஒட்டுவதில் அவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அவர் தன்னிடம் இருந்த ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் மூலம் இதுவரை 20 ஆயிரம் கிலோ மீட்டர் வரை இந்தியாவை சுற்றி வந்துள்ளார்.
 
ஒரு பெண்ணாக, இவர்தான் ஜெய்ப்பூர் மாநிலத்தில் முதன் முதலில் மோட்டார் சைக்கிளை ஒட்டியுள்ளார். பெண்களை ஊக்கிவிக்கும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். அவரது கணவர் அவரை மோட்டார் சைக்கிளை ஒட்டுவதற்கு அனுமதிக்க வில்லை. எனவே சமீபத்தில் அவரை விவாகரத்து செய்து விட்டார்.


 

 
தற்போதும் அவர் மோட்டார் சைக்கிள் மூலம் சுற்றுப்பயனம் செய்து கொண்டிருந்தார். மத்திய பிரதேச மாநிலம் விதிஸா  மாவட்டத்தில் உள்ள கையாராஸ்பூரில் வேணு பலிவால் மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த அவர், சாலையில் கீழே விழுந்தார்.


 

 
அதில் அவர் பலத்த காயமடைந்தார். அதனால், அருகே இருந்த கையாராஸ்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் மேல் சிகிச்சைக்காக விதிஸா மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்