கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட இந்தியரின் மரணதண்டனை

சனி, 30 ஜூலை 2016 (14:19 IST)
இந்தோனேசியாவில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குர்திப் சிங் என்பவரின் மரண தண்டனை கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.


 

 
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குர்திப் சிங் என்பவர் 2004ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டார். 2005ஆம் ஆண்டு அவருக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றதால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
 
இதேபோல் இந்தோனேசியாவை சேர்ந்த 4 பேர், நைஜீரியாவை சேர்ந்த 6 பேர், ஜிம்பாப்வேவை சேர்ந்த 2 பேர் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 1 நபர் உள்ளிட்டோர் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டனர். 
 
இதைத்தொடர்ந்து குர்திப் சிக் உட்பட 14 பேருக்கு நேற்று முன்தினம் இரவு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து நேற்று காலை இந்தோனேசிய அரசு வெளியிட்ட அறிக்கையில், இந்தியர் உட்பட 10 பேரின் மரண தண்டனை கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இந்த 10 பேரின் விவகாரத்தில் மேலும் சில சட்ட நடைமுறைகள் உள்ளன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மரண தண்டனை கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதால் குர்திப் சிங்கின் குடும்பம் மகிழ்ச்சி அடைந்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்