2020ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஹிந்து நாடாகும்: அசோக் சிங்கால்

ஞாயிறு, 19 ஜூலை 2015 (04:44 IST)
2020ஆம் ஆண்டுக்குள், இந்தியா ஹிந்து நாடாகும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவர் அசோக் சிங்கால் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
டெல்லியில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மறைந்த தலைவர் எஸ். சுதர்சனின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவர் அசோக் சிங்கால் கலந்து கொண்டு பேசியதாவது:-
 
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று, மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்றது முதல், இந்தியா சுபிட்சம் அடைந்துள்ளது. ஆன்மீகம் பல மடங்கு தலைத்தோங்கியுள்ளது.
 
நான் சாய்பாபா ஆசிரமத்துக்கு ஒரு முறை சென்ற போது, அவர், என்னிடம் 2020 ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஹிந்து நாடாகும் என்றார். 2030 ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் ஹிந்து புரட்சி வெடிக்கும் என்று சாய்பாபா கூறினார். அந்த காலம் வந்துவிட்டதாக உணர்கிறேன். அதற்கான புரட்சி தற்போது தொடங்கிவிட்டது. இது சாதாரண புரட்சி அல்ல. இமாலய புரட்சி. இந்த புரட்சியானது, இந்தியாவோடு மட்டும் நின்றுவிடாது. உலகம் முழுக்க வெடிக்கும் என்றார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்