ஐடிசி சிகரெட் தயாரிப்பு ஆலை மூடப்பட்டது

வெள்ளி, 6 மே 2016 (20:48 IST)
இந்தியாவின் மிகப்பெரிய சிகரெட் தயாரிப்பு நிறுவனமான ஐடிசி, சிகரெட் உற்பத்தி செய்வதை நிறுத்தியதுடன் ஆலையையும் மூடியது.


 
 
சுகாதார எச்சரிக்கை விழிப்புணர்வை பொது மக்களிடையே அதிகரிக்க உச்ச நீதிமன்றம் புகையிலை எச்சரிக்கை படங்கள் சிகரெட் அட்டையில் 85% இடம் பெற வேண்டும் என்று ஆணையிட்டது.
 
ஐடிசி நிறுவனம் இந்தியாவில் பெரிய அளவில் சிகரெட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாகும். அந்த நிறுவனம் தற்போது உச்சநீதிமன்ற ஆணையின் படி வியாபாரம் பாதிக்கப்படலாம் என்ற முன்னெச்சரிக்கையோடு தனது ஆலையை மூடிவிட்டது.
 
மேலும் சிகரெட்டின் தேவைக்கேற்ப மீண்டும் உற்பத்தி தொடங்கப்படலாம் என்றும், சட்டவிரோதமாக விற்கப்படும் சிகரெட்டுகளால் ஏற்கனவே விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துவிட்டது என்றும் ஐடிசி நிறுவனத்தின் மூத்த தொழில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்