ஒரே திட்டத்தில் இரண்டு ராக்கெட்டுக்கள்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை..!

Siva

ஞாயிறு, 10 மார்ச் 2024 (07:44 IST)
இதுவரை இஸ்ரோ ஒரே திட்டத்தில் ஒரு ராக்கெட் மட்டும் செலுத்திய நிலையில் தற்போது ஒரே திட்டத்தில் இரண்டு ராக்கெட்டுகளை செலுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் இந்த இரண்டு ராக்கெட்டுகள் திட்டம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டால் உலக அரங்கில் இந்தியா மிகப்பெரிய சாதனை செய்ததாக கருதப்படும் என்றும் கூறப்படுகிறது.

இஸ்ரோ வரலாற்றில் முதல் முறையாக சந்திராயன் -4 என்ற திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும் இதில் இரண்டு ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

இந்த இரண்டு ராக்கெட்டுகளில் அதிக எடை தாங்கி செல்லும் LVM-3 என்ற ராக்கெட் மற்றும் PSLV ஆகிய இரண்டு ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டால் நிலவின் மேற்பரப்பில் இருந்து மண் மற்றும் பாறைகளின் மாதிரிகளை பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வரும் திறன் கொண்ட நான்காவது நாடாக இந்தியா மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது

ALSO READ: இந்தியாவில் நடந்த உலக அழகி போட்டி.. பட்டம் வென்ற அழகி எந்த நாட்டை சேர்ந்தவர்?

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்