முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஒவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக வில்லியம்சன் 118, லதாம் 46 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணியில் தரப்பில் மிஸ்ரா, பூம்ரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது.