உலக பணக்கார நாடுகள்: இந்தியாவிற்கு 6வது இடம்...

புதன், 31 ஜனவரி 2018 (16:57 IST)
உலக பணக்கார நாடுகளின் பட்டியலை நியூ வோர்ல்ட் வெல்த் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவிற்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது. இது குறித்த மேலும் விவரங்களை காண்போம்.
 
நியூ வோர்ல்ட் வெல்த் ஆய்வு நிறுவனம் உலக பணக்கார நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு தனிநபர் சொத்து, நிதி ஆதாரம், பங்குகள், நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. 
 
இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தை சீனா பிடித்துள்ளது. ஜப்பான் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. பிரிட்டன் நான்கவது இடத்தையும், ஜெர்மனி 5 வது இடத்திலும் இந்தியா ஆறாவதி இடத்திலும் உள்ளது. 
 
இந்தியாவுக்கு அடுத்தடுத்த இடங்களில் பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி நாடுகள் உள்ளன. சமீபத்தில் மேற்கொள்ளபட்ட மற்றொரு ஆய்வு ஒன்றில் இந்தியாவின் 73% சொத்து ஒரு சதவிகித இந்தியர்கள் வசமே உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்