உலகிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையத்தை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் ஜைதாபூரில் கட்ட முன்னதாக பிரான்ஸ் நிறுவனமான இடிஎஃப் உடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் இந்தியாவிற்கு 10 கிகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்றும், இதன்மூலம் 7 கோடி வீடுகளுக்கான மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும் கூறப்பட்டது.