75 கோடி டோஸ் தடுப்பூசி போட்டு புது மைல் கல்லை எட்டிய இந்தியா - WHO பாராட்டு!

செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (09:49 IST)
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் துவங்கிய தடுப்பூசி போடும் பணிகள் தற்போது வரை 75 கோடி என்ற மைல் கல்லை கடந்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 25,404 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,32,89,579 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. 
 
இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் துவங்கிய தடுப்பூசி போடும் பணிகள் தற்போது வரை 75 கோடி என்ற மைல் கல்லை கடந்துள்ளது. இதனிடையே இது குறித்து உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் தடுப்பூசி செலுத்தும் வேகத்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா அதிகரித்திருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்