இந்தியாவில் இதுவரை இல்லாத அதிக கேஸ்கள்: கொரோனா கோரத்தாண்டவம்

வியாழன், 18 ஜூன் 2020 (06:53 IST)
இந்தியாவில் இதுவரை இல்லாத அதிக கேஸ்கள்
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு 24 மணி நேரத்தில் அதிக கேஸ்கள் பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதாவது இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,103 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. இதனையடுத்து இந்தியாவில் மொத்த கேஸ்களில் எண்ணிக்கை 367,264 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 341 பேர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாகவும் இதனையடுத்து 12,262 பேர் மொத்தமாக இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானோர் எண்ணிக்கை 1,94,438ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் அதிக கொரோனா பாதிப்பு உடைய மாநிலமான மகாராஷ்டிராவில் மொத்த கேஸ்களில் எண்ணிக்கை 1,16,752 என்றும், அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3307 கேஸ்கள் பதிவானதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மகாராஷ்டிராவில் பலி எண்ணிக்கை 5651 ஆக உயர்ந்துள்ளது.
 
மகாராஷ்டிராவை அடுத்து தமிழகத்திலும் நேற்று அதிகமாக கேஸ்கள் பதிவானது. தமிழகத்தில் நேற்று 2174 கேஸ்கள் பதிவானது. மொத்தமாக நேற்று 50193 பேர் தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் பலி எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது,.
 
மேலும் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2414 கேஸ்கள் புதிதாக பதிவாகி உள்ளதாகவும் இதனையடுத்து டெல்லியில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 47102 ஆக உயர்ந்துள்ளதாகவும், டெல்லியில் மொத்தம் இதுவரை 1904 பேர் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்