25 நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து தடுப்பூசி ஏற்றுமதி! – அரசு அனுமதி!

வியாழன், 11 பிப்ரவரி 2021 (09:23 IST)
இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் வெளிநாடுகளுக்கும் மருந்து ஏற்றுமதி செய்ய அரசு அனுமதித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் 1 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் அவசர கால மருந்தாக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 60 லட்சம் பேருக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில் பக்கவிளைவுகள் அதிகம் இல்லாததால் வேறு சில நாடுகளும் இந்த தடுப்பூசிகளை பெற ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் உலகம் முழுவதும் 25 நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த மாதம் 1.05 கோடி டோஸ் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் இந்த மாதம் 2.40 கோடி டோஸ்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்