ஒரு தகவலுக்கு ரூ.5 கோடி சன்மானம்: வருமான வரித்துறை டிவிட்!

வெள்ளி, 1 ஜூன் 2018 (15:35 IST)
வரி ஏய்ப்பை தடுக்கவும், பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்கவும் மத்திய அரசும் வருமான வரித்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
 
தற்போது வருமான வரித்துறை வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணம் தொடர்பாக வருமான வரித்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. இது குறித்து தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தகவலை வெளியிட்டுள்ளது. அவை, 
 
பினாமி பரிவர்த்தனைகள் என்ற தலைப்பிடப்பட்ட ஒரு புதிய வெகுமதி திட்டத்தை வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வரி ஏய்ப்பை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  
 
இத்திட்டத்தின் கீழ், ஒரு நபர் குறிப்பிட்ட முறையில் தகவலை வழங்கினால் 1 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும். வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் தந்தால் ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும்.
 
மேலும், வெளிநாடுகளில் உள்ள கருப்புப்பணம் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.5 கோடி வரை சன்மானம் தரப்படும் என அற்வித்துள்ளது. அதோடு, தகவல் தருவோரின் விவரங்கள்  ரகசியமாக வைக்கப்படும் எனவும் வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்