ஆந்திரவில் ஹிராக்கந்த் ரயில் தடம் புரண்டு 42 பேர் பலி!

திங்கள், 23 ஜனவரி 2017 (11:09 IST)
ஆந்திர மாநிலத்தில் ஜக்தல்பூர்-புவனேஷ்வர் இடையே செல்லும் ஹிராக்கந்த் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு  விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

 
சத்தீஸ்கரின் ஜகதல்பூரில் இருந்து சனிக்கிழமை மாலை 4.25 மணிக்கு ஒடிஷா தலைநகர் புவனேஸ்வருக்கு ஹிராகாண்ட்  எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் இரவு 11.30 மணிய ளவில் ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டம், கொமராட  மண்டலத்தில் உள்ள கூனேரு ரயில் நிலையத்தின் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ரயிலின் இன்ஜின் தடம்  புரண்டது. அடுத்தடுத்து உள்ல ஏசி பெட்டிகள், லக்கேஜ், பொது வகுப்பு, 2-ம் வகுப்பு உட்பட ஒன்பது பெட்டிகள் தடம் புரண்டன. 
 
விபத்துக்குள்ளான பெட்டிகளில் பயணம் செய்த 23 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரயில்வே அதிகாரிகள், போலீஸார்,  தீயணைப்பு படையினர் மற்றும் பொது மக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு மேலும் 18 பேர் உயிரிழந்தனர்.
 
இறந்தவர்களில் 13 பேர் பெண்கள் ஆவர். படுகாயமடைந்த 50-க்கும் மேற் பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  அவர்களில் பலரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். பலியானவர்கள் குடும்பங்களுக்கு மத்திய ரயில்வே துறை 2 லட்சம் ரூபாயும்,  மாநில அரசு 5 லட்சம் ரூபாயும் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்